ETV Bharat / bharat

ஜன.18-ல் 'பிஆர்எஸ்' கட்சிப் பொதுக்கூட்டம் - டெல்லி, பஞ்சாப், கேரள CM-களுக்கு அழைப்பு!

தெலங்கானாவில் வரும் 18ஆம் தேதி பாரத ராஷ்டிர சமிதியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்துகொள்ள டெல்லி, பஞ்சாப், கேரளா மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

BRS's
BRS's
author img

By

Published : Jan 9, 2023, 8:46 PM IST

ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக தேசிய கட்சி தொடங்கவும் முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் தனது மாநில கட்சியான "தெலங்கானா ராஷ்டிர சமிதி"-ஐ தேசியக் கட்சியாக அறிவித்தார். அந்த தேசிய கட்சிக்கு "பாரத ராஷ்டிர சமிதி" எனப் பெயர் மாற்றம் செய்தார். பிஆர்எஸ் தேசிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அங்கீகாரம் அளித்தது.

இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி பாரத ராஷ்டிர சமிதியின் பொதுக்கூட்டத்தை நடத்த அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டம், கம்மம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தை, அரசியல் ரீதியாக முக்கியமான மாவட்டமாக கே.சந்திர சேகர ராவ் கருதுகிறார். அதன் காரணமாகவே அங்கு பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், கெஜ்ரிவால், பகவந்த்மான், அகிலேஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும், இக்கூட்டத்தில் கம்மா, மஹபூபாபாத், பத்ராத்ரி, சூர்யாபேட்டை, நல்கொண்டா, வாரங்கல், முலுகு, பூபாலபள்ளி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"திமுக இப்படிப்பட்ட கட்சியா?" எம்எல்ஏ மார்கண்டேயருக்கு எதிராக வலுக்கும் குரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.