ETV Bharat / bharat

தோழியுடன் கடலை போட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் கைது!

author img

By

Published : Jan 13, 2023, 11:02 PM IST

டெல்லி - புனே ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் டிக்கெட் ஏஜென்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி - புனே செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் நேற்று (ஜன.12) மாலை தயாராக இருந்தது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு மாலை 5.30 மணிக்கு மேல் மிரட்டல் விடுக்கப்பட்டது.

மர்ம நபரின் மிரட்டலை அடுத்து விமானம் உடனடியாக ஓடுபாதையை விட்டு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிக்னல் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார், டெல்லியைச் சேர்ந்த அபினவ் பிரகாஷ் என்பரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அபினவ் பிரகாஷ் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் கவுன்ட்டர் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் அபினவ் பிரகாஷ் கூறியது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது. புனே செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தன் நண்பர்களின் தோழிகள் பயணிக்க இருந்த நிலையில், தோழிகளுடன் கூடுதலாக நேரம் செலவிட ஏற்பாடு செய்யுமாறு நண்பர்கள் கெஞ்சிக் கேட்டதால் விமானத்திற்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அபினவ் பிரகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அபினவ் பிரகாஷிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: MV Ganga Vilas cruise: ஒரு கப்பலில் இவ்வளவு வசதிகளா? மலைக்க வைக்கும் டிக்கெட் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.