ETV Bharat / bharat

உதம்பூரில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலர் படுகாயம்! - பலர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

Bridge collapse
பாலம் இடிந்து விபத்து
author img

By

Published : Apr 14, 2023, 9:29 PM IST

உதம்பூர்: வடமாநிலங்களில் வசந்த கால அறுவடையின் தொடக்கமாக ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதிகளில், பைசகி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனர். உதம்பூர் அருகே உள்ள பேனி சங்கம் பகுதியிலும், குடும்பத்தினருடன் ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது, அங்குள்ள ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஆற்றுக்குள் விழுந்த பலர் காயம் அடைந்தனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் அலறினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படை வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக செனானி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அதிகளவில் மக்கள் பாலத்தில் ஏறியதால் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் பாலத்தில் ஏறியதே விபத்துக்குக் காரணம்" என்றனர்.

செனானி நகராட்சித் தலைவர் மாணிக் குப்தா கூறும்போது, "பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர். 20 முதல் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 7 பேர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றார். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிவு - 21 வயது இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.