13ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின், இந்த ஆண்டு உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கியது.
இதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களான பிரதமர் நரேத்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ, தென் ஆப்பிரிக்கா சிரில் ரமபோசா ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தலைமை உரை
இந்த மாநாட்டில் உரையற்றிய பிரதமர் மோடி, "கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பு பல சாதனைகளை புரிந்துள்ளது. சர்வதேச அரங்கில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பொருளாதார சக்திகளாக உருவெடுத்து வருகின்றன.
வளர்ந்துவரும் நாடுகளின் தேவைகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் அமைப்பு இதை விட சிறப்பாக செயல்பட உறுதி கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் உலகின் பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு விளங்கும். எங்கள் அமைப்பின் நீர்வளத்துறை அமைச்சர்கள் கூட்டம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது" என்றார்.
-
Addressing the BRICS Summit. https://t.co/qBcD6hS0lL
— Narendra Modi (@narendramodi) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Addressing the BRICS Summit. https://t.co/qBcD6hS0lL
— Narendra Modi (@narendramodi) September 9, 2021Addressing the BRICS Summit. https://t.co/qBcD6hS0lL
— Narendra Modi (@narendramodi) September 9, 2021
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்தபின் நடைபெறும் முக்கிய சர்வதேச உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: NIRF RANKING: தேசிய அளவில் மீண்டும் ஐஐடி சென்னை முதலிடம்