ETV Bharat / bharat

துணையில்லா வாழ்வை தேர்வு செய்யும் இந்திய பெண்கள் - காரணம் தெரியுமா? - Indian women are finding solace in singlehood

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் திருமண உறவு சிக்கல்களால் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை 71.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. முன்னதாக 2001இல் 51.2 மில்லியனாக இருந்தது. இதற்கான காரணம் மற்றும் நிபுணர்கள் கூறுவதை இங்கு காணலாம்.

நாட்டில்
நாட்டில்
author img

By

Published : Jul 8, 2022, 8:30 PM IST

ஹைதராபாத்: பாண்டிச்சேரியைச் சேர்ந்த பானி ஸ்ரீவஸ்தவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இளம் வயதில் திருமணத்தின் மீது இவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஜாலியாக இளமை பருவத்தில் இருந்து வந்தாள். அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என கனவு இருந்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் திருமணம் குறித்து பெற்றோர் பேசுவார்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

நாட்கள் கழிந்தன, பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப சில வாரங்களில் அவளின் அடுத்த கட்ட வாழ்க்கை குறித்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த இன்ஜினியருடன் அவளுக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. கடிதம் அனுப்புவது, வெளியில் சென்று வருவது என நன்றாக சென்றது.

அந்த வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார். பின்னர் அவளும் டெல்லி சென்று அவளுக்கு பிடித்த ஆசிரியை பணியில் சேர்ந்தாள். இவ்வாறாக இருக்கையில், ஒரு நாள் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து கசப்பான அனுபவங்களை சந்திக்கிறாள். சகித்துக்கொள்கிறாள். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பானி தாக்கப்படுகிறாள்.

பின்னர் அவளுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, கணவர் சிகிச்சைக்கு பணம் தர மறுக்கிறார். அவளது திருமண உறவு முறிந்தது. அவளது குடும்பத்தினர் அவளுக்கு ஆதரவு தரவில்லை. "வாழ்க்கை ஒரு நரகமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் அந்த வாழ்க்கை வாழ விரும்பவில்லை. விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். எனக்கு 30 வயது , என் முழு வாழ்க்கை என்னிடம் உள்ளது என்றார்.

இந்தியாவில் விவாகரத்து விகிதம் குறைவு, ஆனால்..

மேலும், நான் மற்றவர்களை நம்புவதை விட என்னை நம்ப முடிவு செய்தேன். கசப்பான ஓர் உறவில் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது" என்று பானி கூறினார். உலகளவில் விவாகரத்து பெற்றவர்கள் சதவீதத்தின் அடிப்படையில் இந்தியாவில், விவாகரத்து சதவீதம் குறைவு. இந்தியாவில் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஓர் ஆய்வில், இந்தியாவில் 1000 திருமணங்களில் 13 திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் எண்ணிக்கைகளை வைத்து, திருமணம் ஆனவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறமுடியாது. விவாகரத்து என்ற முடிவை பெண்கள் எடுக்காமல் போவதற்கான பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்திய சமூகம் விவாகரத்து பெற்றவர்கள் மீதான பார்வை, வருமானம், குடும்பத்திற்கு அவமானம் வந்து விடுமே என்ற அச்சம் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனினும், முற்போக்கான சமூகத்தை நோக்கிச் செல்லும் சூழலில், தற்போது உள்ள பெண்கள் உறுதியான முடிவுகளை எடுக்கிறார்கள். அதே நேரத்தில் வேலை மற்றும் குழந்தை வளர்ப்பை நிர்வகிக்கிறார்கள். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை 51.2 மில்லியனாக இருந்த நிலையில், 2011இல் 71.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது பெண்கள் கசப்பான, சகித்துக்கொண்டு ஓர் உறவில் இருப்பதை விட தனியாக வாழ்வதை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

விவாகரத்து பற்றிய தவறான பார்வை மாற வேண்டும்

விவாகரத்து பற்றிய மனநிலை தற்போது மெல்ல மாறி வருகிறது. பிரிந்து வாழ்வது தவறானது என்ற எண்ணம் மாறிவருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மும்பையைச் சேர்ந்த டாக்டர் ரீமா ஷா கூறுகையில், " விவாகரத்து என்பது தவறான செயல் அல்ல. மோசமான ஓர் திருமண உறவில் பெண் இருப்தை விட விவாகரத்து பெறுவது நல்லது. மக்களுக்கு இது குறித்தான புரிதல் ஏற்பட வேண்டும்" என்று கூறினார்.

அதே வேளையில், காஷ்மீர், ஸ்ரீநகரைச் சேர்ந்த பெண்ணுக்கு விவாகரத்தின் தாக்கம் கடினமாக இருந்தது. அவரின் 4 வயது மகள் பெற்றோர் பிரிவால் பாதிக்கப்பட்டார். மனதளவில் பாதிக்கப்பட்டார். இருப்பினும், குடும்பம் மற்றும் உறவினர்களின் ஆதரவு அவருக்கு துணையாக ஆதரவாக இருந்து வருகிறது.

இதுபோன்ற சூழலில் பெற்றோர் நிபுணர்களின் உதவியைப் பெற வேண்டும் என்று டாக்டர் ரீமா கூறுகிறார். இன்றும் பல திருமணங்களில் பெண்கள் மட்டும் வீட்டை வேலைகளை அதிகம் கவனித்து வரும் சூழல் உள்ளது. கணவன், மனைவி இடையே சமமற்ற நிலை உள்ளது. இருவருக்குமான தொடர்புயின்மை, தாம்பத்தியத்தில் பிரச்சனை என விவாகரத்துக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

டாக்டர் ரீமா 'கான்சியஸ் அன்கப்ளிங்' என்பதைப் பற்றி கூறுகிறார். கான்சியஸ் அன்கப்ளிங் அதாவது தமிழில் முன்னுணர்வுடன் கூடிய பிரிதல் என்பது தம்பதிகள் தாங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு, குழந்தைகள் உள்பட அனைவரையும் கருத்தில் கொண்டு பிரிவது. ஆனால் குழந்தைகளை இருவரும் சேர்ந்து வளர்ப்பது ஆகும். இந்தியாவில் இது பற்றி அதிகம் தெரிய வேண்டும் என்று கூறினார்.

விவாகரத்தான பெண்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்

அவர்களுடைய கனவு மற்றும் நம்பிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும். அவர்கள் என்ன விரும்புகிறாள் என்பதை உணர்வு அவர்களது முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஒரு பெண் கசப்பான திருமண உறவில் இருக்கிறாள் என்றால், அவர்களது பெற்றோர், உறவினர்கள் அந்த உறவில் நீடிப்பது குறித்து அறிவுரைகளை வழங்குவதை விட உண்மையாக அவள் அதிலிருந்து வெளியேற நினைத்தால், அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நிபுணர்களின் ஆலோசனை பெறாம் என்றும் ரீமா கூறினார்.

கட்டுரை - ஆயுஷ்மான் பாண்டே

தமிழில் - சங்கவி ராமசாமி

இதையும் படிங்க: 'சாதிக்க வயது தடையில்லை': இமயமலைத்தொடர்களை கடக்கும் 50 வயதைத் தாண்டிய பெண்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.