திருச்சூர்: மரத்தில் இருந்து விழுந்து படுத்த படுக்கையான தந்தை, தைரியமூட்டும் கணவன் ரஹ்மான் என வறுமை, பழைமையை எதிர்த்து தனியாளாக போராடுகிறார் சுபினா.
29 வயதான இவர் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிங்கலகுடா முக்திஸ்தானில் உள்ள மின்தகன மேடையில் பணிபுரிகிறார். இந்தப் பெருந்தொற்று நேரத்தில் மிகவும் ஆபத்தான இவ்வேலையை மனத் தைரியமுடன் செய்கிறார் சுபினா.
இந்தப் பணியில் சுபினா பல இடையூறுகளை சந்தித்துள்ளார். பழைமைவாதிகளின் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளார். சுபினாவின் தந்தை மரம் வெட்டும் தொழிலாளி.
அண்மையில் மரம் வெட்டும்போது மரத்திலிருந்து தவறிவிழுந்து அவரின் கால்கள் உடைந்தன. இதனால் தற்போது அவர் படுத்தப் படுக்கையாக காணப்படுகிறார்.
சுபினாவுக்கு ஒரே ஆறுதல் அவரின் கணவர் ரஹ்மான். சுபினாவுக்கு தோளோடு தோளாக நிற்கிறார். இதற்கிடையில், இடுகாட்டு தகன மேடையில் வேலை செய்வது உங்களுக்கு பயமாக இல்லையா? எனக் கேள்வியெழுப்பினால் தைரியம் கலந்த புன்னகையை பரிசாக நமக்கு தருகிறார். பொதுவாக இதுபோன்ற வேலைகளை இடுகாட்டில் ஆண்கள்தான் செய்வார்கள் என வினாவினால், “ பண்டை காலம் தொண்டே பாரம்பரியமாக இந்தப் பணிகளை ஆண்கள்தான் செய்கிறார். நான் ஒரு பெண், இஸ்லாமிய பெண். எனக்கு குடும்பம் ஆதரவாக இருக்கிறது, பயமில்லை” என்கிறார்.
சுபினா வீட்டில் வறுமை கோரத்தாண்டவம் ஆடுகிறது. இவள்தான் மூத்தவள். அவளுக்கு சகோதரி ஒருவரும் உள்ளார். அவளுக்கு திருமணம் செய்துவைக்கும் பொறுப்பையும் சுபினா ஏற்றுக்கொண்டுள்ளார்!
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தக் கூடாது- காவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு