ஹைதராபாத்: இயக்குநர் அயன் முகர்ஜியின் பிரம்மாஸ்திரா படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்துள்ளனர். விடுமுறை இல்லாத நாளில் வெளியாகியும் முதல் நாளில் ரூ. 36 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. வர்த்தக இணையதளமான BoxOfficeIndia.com பிரம்மாஸ்திரா படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
அதேபோல முதல் நாளில் ரூ.34.75 வசூலித்த ரன்பீரின் சஞ்சு படத்தின் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. இதுவரை பாலிவுட்டில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக பிரம்மாஸ்திரா உள்ளது. மொத்தம் 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 310 கோடி ரூபாய் பட்ஜெட்டில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பிரம்மாஸ்திரா படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் படத்தின் பிரமண்டத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியாவில் 5,019 திரையரங்குகளும், வெளிநாடுகளில் 3,894க்கும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.
Boycott பிரம்மாஸ்திரா: இதனிடையே சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லால் சிங் சத்தா, லிகர் மற்றும் ரக்ஷா பந்தன் போன்ற படங்களை தொடர்ந்து, ரன்பீர்-ஆலியா நடித்த பிரம்மாஸ்திரா ரிலீஸுக்கு முன்பே ட்ரோல்களுக்கு உள்ளானது.
இதையும் படிங்க:பாய்காட் பிடியில் சிக்கி சின்னாபின்னமான "பிரம்மாஸ்திரா"!