90 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு - 90 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் மீட்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் 90 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் 20 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் லச்சடி என்னும் கிறாமத்தை சேர்ந்தவர் நான்கு வயது சிறுவன் நேற்று (மே 6)வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 90 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதனையறிந்த சிறுவனின் பெற்றோர், தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சிறுவனை மீட்கும பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறுவனுக்குத் தேவையான ஆக்சிஜன், உணவு உள்ளிட்டவற்றை குழாய் மூலம் அனுப்பினர்.
சுமார் 20 மணி நேரமாக நடந்த இந்த மீட்பு போராட்டத்தின் இறுதியில் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, தயார் நிலையில் இருந்த அவசர ஊர்தி மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.