ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ளூர் சந்தை ஒன்றின் திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர் உட்பட பல பாஜகவினர் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த நைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்ட பலூன், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியதில் முன்னாள் அமைச்சர் உட்பட பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
விழாவில் பங்கேற்ற ரோஹ்தக் எம்.பி. டாக்டர் அரவிந்த் ஷர்மாவின் மனைவி, மகளுக்கு முகம் மற்றும் தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டன. இதில், பல செய்தியாளர்களும் காயமடைந்தனர்.