நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் சோலார் வெடிமருந்து நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள தொழிற்சாலையில், காஸ்ட் பூஸ்டரை பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக, நாக்பூர் எஸ்பி ஹர்ஷ் போதர் தெரிவித்துள்ளார்.
மேலும், காயம் அடைந்த நபர்கள் அரசு மருத்த்வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், வெடி விபத்து குறித்து அறிந்த நிறுவனப் பணியாளர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தொழிற்சாலையின் முன்பு பெருமளவில் கூடியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்த விபத்தில் யுவராஜ் கிருஷ்ணாஜி கரோட், ஓமேஷ்வர் கிஷான்லால் மச்ச்சிர்கே, மிடா பிரமோத் உயிக், ஆர்தி நீலகண்ட சஹாரே, ஸ்வேதிடாலி தாமோதர் மார்படே, புஷ்பா ஸ்ரீராம்ஜி மன்புரே, பாக்யஸ்ரீ சுதாகர் லொடனே, ருமிடா விலாஸ், உயிக் மற்றும் மோசம் ராஜ்குமார் பாட்லே ஆகியோர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இவர்களில் 2 பேர் வர்தா, ஒருவர் சந்திராபூர், ஒருவர் அமராவதி மற்றும் ஐந்து பேர் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: 3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!