தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இம்மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அண்மையில் நியமித்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அங்கு கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இரண்டும் ஊழலில் திளைத்து மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளன. இருவரும் அதிகார வெறியை மட்டுமே கொண்டு மக்கள் திட்டங்களை புறக்கணித்தவர்கள்.
தங்கக் கடத்தல் மோசடியில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரே தொடர்பில் இருப்பது அங்கு நிலவும் ஊழலின் உச்சத்தை காட்டுகிறது. தொடர்ந்து உயர்ந்துவரும் கோவிட்-19 பாதிப்பை கையாள முடியாத திறன் கொண்ட அரசாக இடதுசாரி அரசு உள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 62 வயதில் 10 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம் - பால் அத்தை ஷீலா தேவி