காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான, மதன் லால் சர்மா (68) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு ஜம்மு காஷ்மீர் பாஜகத் தலைவர் ரவீந்தர் ரெய்னா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "மிகவும் கவலைக்குரியச் செய்தி. கடின உழைப்பாளியான முன்னாள் எம்.பி மதன் லால் சர்மாவின் மறைவு கவலை அளிக்கிறது. அவருடயை ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல மலையாளக் கவிஞர் சுகதா குமாரி காலமானார்!