ETV Bharat / bharat

பாஜக எம்எல்ஏ என்ட்ரியால் பாதியில் நிறுத்தப்பட்ட தேசிய கீதம்! - மேற்கு வங்கம் செய்திகள்

மேற்கு வங்கத்தில் கால்பந்து வீரர்களுடன் பாஜக எம்எல்ஏ கைகுலுக்கிக் கொண்டிருந்ததால், தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

BJP MLA
பாஜக எம்எல்ஏ
author img

By

Published : Aug 5, 2021, 6:02 PM IST

மேற்கு வங்க மாநிலம் பாசிம் பர்தமானில் குல்தியின் சங்க்டோரியா பகுதியில் பாஜக எம்எல்ஏ அஜய் பொட்டரால், கால்பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். மைதானத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்த வீரர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ அவர்களுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மேடையிலிருந்த பாடகர்கள் சிலர் தேசிய கீதத்தைப் பாடத் தொடங்கினர். உடனடியாக, போட்டி நடுவர் விசில் ஊதி தேசிய கீதம் பாடுவதை நிறுத்தினார். இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய கீதத்தைப் பாதியில் நிறுத்துவதா என கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து எம்எல்ஏ அஜய் பொட்டரால் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், " எம்எல்ஏ வீரர்கள் இடையிலான சந்திப்பிற்கு பிறகே, வீரர்கள் வரிசையாக நின்றதும் தேசிய கீதம் பாட திட்டமிடப்பட்டிருந்தது.

பாஜக எம்எல்ஏ என்ட்ரியால் பாதியில் நிறுத்தப்பட்ட தேசிய கீதம்

ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடைய நேரம் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு. பின்னர், நான் வீரர்களுடன் வரிசையாக நின்றதும், தேசிய கீதம் பாடப்பட்டது என்றார்.

இவ்விவகாரம் குறித்து பேசிய குல்ட்டியின் மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிஸ்வாஜித் சட்டோபாத்யாய், " வீடியோவை பார்க்கும் போது, தெளிவாக தெரிகிறது எம்எல்ஏ தான், தேசிய கீதத்தை நிறுத்த சிக்னல் கொடுக்கிறார்.

அதன்பிறகே, போட்டு நடுவர் பாடுபவர்களை நிறுத்துமாறு வீசில் அடிக்கிறார். நான் வீடியோ உன்னிப்பாகக் கவனித்துவிட்டேன். இதை மறுக்க முடியாது. எம்எல்ஏவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆனால், பாஜகவைப் பற்றி எவ்வளவு குறைவாகப் பேசுகிறோம், அவ்வளவு நல்லது என்பது மேற்கு வங்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இது பாஜகவுக்கும் நன்கு தெரியும். இது வெட்கக்கேடானது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெள்ளி வென்றார் ரவிக்குமார்; இந்தியாவிற்கு ஐந்தாவது பதக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.