புவனேஸ்வர் (ஒடிசா): திலீபானி வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய தியோகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுபாஷ் சந்திர பாணிகிரஹி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் இன்று (மே 1) கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம், புபனேஸ்வரில் உள்ள திலீபானி பகுதி வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர், கிருஷ்ணா சந்திர தல்படி.
இவர் நேற்று (ஏப்ரல் 30) பாலியகுடி கிராமத்திற்கு பள்ளி வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுபாஷ் சந்திர பாணிகிரஹி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணா சந்திர தல்படியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
காயடைந்த அவர் சம்பவம் குறித்து தியோகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தியோகர் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சந்திர பாணிகிரஹி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை இன்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சை பேச்சு - கேரள முன்னாள் எம்எல்ஏ கைது!