ETV Bharat / bharat

உ.பி தேர்தல்: லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 8 இடங்களில் பாஜக முன்னிலை - தேர்தல் 2022

நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் கொல்லப்பட்டு, பெரும் சர்ச்சை வெடித்த லக்கிம்பூர் கேரி தொகுதியில், பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

BJP leads in Lakhimpur Kheri  UP polls  elections 2022  Assembly polls 2022  Lakhimpur Kheri  பாஜக முன்னிலை  லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை  உ.பி தேர்தல்  உத்தரபிரதேச தேர்தல்  தேர்தல் 2022  சட்டமன்ற தேர்தல் 2022
லக்கிம்பூர் கேரியில் பாஜக முன்னிலை
author img

By

Published : Mar 10, 2022, 4:45 PM IST

Updated : Mar 10, 2022, 4:57 PM IST

லக்கிம்பூர் கேரி(உ.பி): வேளாண் திருத்தச் சட்டங்கள் காரணமாகவும், அதனை பாஜக அரசு கையாண்ட விதத்திலும் லக்கிம்பூர் கேரியில், பாஜக மீது, விவசாயிகள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் 3, 2021 அன்று, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றதாகவும் கூறப்பட்டு வந்தது.

இச்சம்பவத்திற்காக அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியபோதிலும், அவர் அமைச்சரவையில் தொடர்கிறார். இந்த நிகழ்வும் விவசாயிகள் மத்தியில் கடும்கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா நீண்ட நாள்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டார். இதனால் உத்தரப்பிரதேச தேர்தல், லக்கிம்பூர் கேரி பேசும்பொருளானது.

தட்டி தூக்கிய பாஜக

இந்த விவகாரத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பிற கட்சிகள், பாஜக-வை விமர்சிப்பதும், அதனை எதிர்த்துப்போராடுவதும் என பல செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும், உத்தரப்பிரதேச தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸ் சார்பாக ரவிசங்கர் திரிவேதி, பாஜக சார்பில் யோகேஷ் வர்மா, சமாஜ்வாதி சார்பில் உட்கர்ஷ் வர்மா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மோகன் பாஜ்பாய், ஏஐஎம்ஐஎம் சார்பில் மோ. உஸ்மான் சித்திக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பிற்பகல் 1.15 மணி நிலவரப்படி, பாஜக எம்எல்ஏ ஷஷாங்க் வர்மா, 53,785 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...

Last Updated : Mar 10, 2022, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.