பாஜக தேசிய செயலாளரான சி.டி. ரவி தமிழ்நாடு, மகாரஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது பதிவில் அவர், அலெக்சாண்டர், முகமது கஜினி, முகலாயர்கள், சோனியா காந்தியின் காங்கிரஸ் ஆகியோர் இந்தியாவில் வெற்றிகொண்டது அவர்களின் பலத்தால் அல்ல, நமது ஒற்றுமையின்மையால்தான். எனவே, நமது தர்மத்தை காக்க ஒன்றிணைய வேண்டிய தருணமிது. பாரத மாதவுக்காக இதை செய்வது நமது கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முகமது கஜினி, அலெக்சாண்டர் உள்ளிட்டோருடன் ஒப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் இது போன்று கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனை தீ விபத்து : குஜராத் அரசுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்!