குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, ஜனவரி மாதம் முதல் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என மேற்குவங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். வடக்கு பர்கானாஸ் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "அநேகமாக, ஜனவரி மாதம் முதல் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் மதத்தின் அடிப்படையின் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியாவிற்கு குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க பாஜக வழிவகை செய்துள்ளது. வாக்குறுதி அளித்தால் அதனை பாஜக எப்போதும் நிறைவேற்றும். 30 விழுக்காட்டினரின் பிரச்னைகளில் மட்டுமே மேற்கு வங்க அரசு கவலை கொள்கிறது. மீதமுள்ள 70 விழுக்காடு மக்களின் பிரச்னைகளில் மம்தா அரசு கவலை கொள்வதில்லை.
பிரதமர் மோடி முழங்கும் அனைவருக்குமான வளர்ச்சியில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது". கடந்தாண்டு டிசம்பரம் மாதம், குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.