ETV Bharat / bharat

பாஜக நிறுவன தினம் - பிரதமர் மோடி உரை!

நாட்டை வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து விடுவிக்க பாஜக உறுதி கொண்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Modi
Modi
author img

By

Published : Apr 6, 2023, 2:38 PM IST

Updated : Apr 6, 2023, 3:06 PM IST

டெல்லி : பாஜகவின் 44வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கொடியேற்றினார். தொடர்ந்து நிறுவனத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டை ஊழல், நெப்போட்டிசம் என்ற வாரிசு அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு சவால்களில் இருந்து விடுவிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. நாட்டில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் ஒரு தியாகி. இதுபோல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்க வேண்டும். அனுமன் போல் பாஜக பிரதி பலன் பார்க்காமல் உழைக்கிறது. அனுமனைப் போலவே இந்தியாவும் தனது திறனை உணர்ந்து வருகிறது'' என்றார்.

எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியாது என்று கூறிய பிரதமர் மோடி தொலைநோக்கு இலக்குகளை நிர்ணயம் செய்ய முடியாமலும் எதிர்க் கட்சிகள் திணறி வருவதாகவும் சிறிய சாதனைகளில் திருப்தி அடைவதாகவும் கூறினார். பெரிய கனவுகள் மற்றும் பெரிய இலக்குகளை அடைவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

370வது சட்டப்பிரிவு என்றாவது ஒரு நாள் வரலாறாக மாறும் என்றும்; இதனை எதிர்க்கட்சிகள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்த பிரதமர் மோடி பாஜக செய்து வரும் வேலையை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சிகள் மிகவும் அவநம்பிக்கை அடைந்துள்ளதாகவும், பாஜகவுக்கு எதிரான பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

  • #WATCH | Chennai: Tamil Nadu BJP Chief K Annamalai paints the party's lotus symbol on a wall nearby the BJP office in T Nagar on BJP's 44th Foundation Day pic.twitter.com/yUZ71QFf1z

    — ANI (@ANI) April 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தாமரைச் சின்னத்தை சுவரோவியமாக வரைந்தார். அதேபோல் சென்னையில் நடந்த பாஜக நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி சின்னத்தை தொண்டர்கள் முன்னிலையில் வரைந்தார்.

இதையும் படிங்க : Repo Rate : ஆர்பிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி! - வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லையா?

Last Updated : Apr 6, 2023, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.