ETV Bharat / bharat

பில்கிஸ் பானு வழக்கு; சிறையில் சரணடைய கால அவகாசம் கேட்டு மூவர் கோரிக்கை! - சரணடைய கால அவகாசம் கோரி வழக்கு

Bilkis Bano case: பில்கிஸ் பானோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அதிகாரிகளிடம் சரணடைவதற்கு முன், நான்கு வாரங்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய அவகாசம் கோரி மனு

author img

By PTI

Published : Jan 18, 2024, 2:14 PM IST

டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தனது குடும்பத்தினரையும் கொலை செய்த 11 பேர் மீது தொடர்ந்த வழக்கில், கடந்த 2008ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டது. அதன் பின்னர், ஆயுள் தண்டனையில் இருந்த 11 பேரையும், குஜராத் நீதிமன்றம் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்து உத்தரவிட்டது.

அதனைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க, தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி, நாட்டையே உறையச் செய்த பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதில், பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் நன்னடத்தை எனக் கூறி முன்விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவு, ஒரு சார்புத் தன்மை உடையது என்று கூறி, குற்றம் சாட்டபட்ட அனைவரையும் இரண்டு வாரங்களில் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மாநில முதலமைச்சர்கள் என பலர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் இடைவெளி! அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில், மூவர் மட்டும் சரணடைய கால அவகாசம் கோரியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சஞ்சை கரோல் தலைமையிலான அமர்வு, சரணடைய கால அவகாசம் கோரிய வழக்கை மறு பரிசீலனை செய்ய தலைமை நீதிபதியின் உத்தரவு வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை மேற்கொள்வதற்கான அமர்வை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை அமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முன்விடுதலை ரத்து செய்யப்பட்ட 11 கூட்டுப் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்கள், சிறையில் சரணடைவதற்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அயோத்தி கோயிலில் ராமர் சிலை நிறுவப்பட்டது.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.