மேற்கு சம்பரான்: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் விஷசாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தாக லாரியா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பீகார் துணை முதலமைச்சர் ரேணு தேவி கூறுகையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
இந்தநிலையில் நேற்று (ஜூலை17) வரை இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: மும்பையில் சுவர் இடிந்து 12 பேர் உயிரிழப்பு