ETV Bharat / bharat

6 மாநிலம் 6 கல்யாணம்..? சோட்டு குமாரின் சில்மிஷம்!

வங்காளம், டெல்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 6 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பீகாரைச் சேர்ந்த சோட்டு குமார் என்ற இளைஞர் ஜமுயி ரயில் நிலையத்தில் பிடிபட்டுள்ளார்.

பீகாரில் 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சோட்டு

author img

By

Published : Nov 30, 2022, 6:27 PM IST

ஜமுயி(பீகார்): ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் இசைக் கலைஞராக பணிபுரிபவர் சோட்டு குமார். இவர் ஆறு பெண்களை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும் ஜமுயி ரயில் நிலையத்தில் சோட்டு குமார் தனது முதல் மனைவியுடன் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரண்டாவது மனைவியின் சகோதரர் விகாஸ் தாஸ் பார்த்த போது, தன்னை சோட்டுவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாஸை அழைத்து செல்ல அவர் மறுத்துவிட்ட காரணத்தால், தாஸ் சோட்டுவை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சோட்டுவை சமரசமாக பேசி தீர்த்து வைக்குமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோட்டு கூறுகையில், ‘நான் ஆறு பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த கலாவதி தேவி எனது முதல் மனைவி மற்றும் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சுந்தர்தாண்டில் உள்ள மஞ்சு தேவி எனது இரண்டாவது மனைவி. மேலும் இந்த இரண்டு திருமணங்களும் நிச்சயிக்கப்பட்டு முறையே 2018 மற்றும் 2020ல், இந்த இரண்டு பெண்களுடன் மட்டுமே திருமணம் செய்து கொண்டேன். மற்ற நான்கு திருமணங்கள் பற்றிய குற்றச்சாட்டு உண்மை இல்லை என கூறினார்."

சோட்டுவின் மாமியார் கோபியா தேவி கூறுகையில், "அவர் எனது மகளின் வாழ்க்கையை மட்டுமல்ல, மற்றவர்களையும் அழித்துள்ளார். என் மகளைப் பார்க்க ஒருமுறை சோட்டு குமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். பின்னர் மருந்து கொண்டு வருவதற்காக வெளியே செல்வதாகக் கூறித் தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பி ஓடி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, தற்போது ஜாமுயி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது பிடிபட்டுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.