ETV Bharat / bharat

அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி, குழந்தையை விரட்டிய நபர்.. பீகாரில் நிகழ்ந்த சம்பவம்!

திருமணம் ஆகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு வேலை கிடைத்த கணவர், தனது, மனைவி மற்றும் 2 குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம், பீகார் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

அரசு வேலை படுத்தும் பாடு - பிகாரில் மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டிய கொடூரம்!

author img

By

Published : Jul 17, 2023, 1:50 PM IST

நவாடா: பீகார் மாநிலம் கொனாவா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் அவருக்கு அரசு வேலை கிடைத்து உள்ளது. அரசாங்க வேலை கிடைத்த நிலையில், அவரது நடவடிக்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. இந்த மாற்றங்களின் உச்சக்கட்ட அதிர்ச்சியாக, கட்டின மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளையே, வீட்டை விட்டு விரட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவருக்கு அரசு வேலை கிடைத்தது. இந்நிலையில், தன்னையும், தனது இரண்டு குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார். நான், குழந்தைகளுடன் வீட்டின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டேன். இந்த விவகாரத்தில், தீர்வு ஏற்படுத்த காவல்துறையினர் முயன்ற போதும், அவர் வீட்டின் கதவை திறக்க மறுத்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நான், தனது மாமியார் வீட்டின் முன் தனது இரண்டு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆனால், எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறக்க முயன்றும் எவ்வித பலனும் கிட்டவில்லை. இதனை அடுத்து, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, போலீசார் உடன் காவல் நிலையத்திற்கு சென்று விட்டதாக, குறிப்பிட்டு உள்ளார்.

திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அரசு வேலை கிடைத்து உள்ளது. மாநில அரசின் சுகாதாரத் துறையில் வேலை கிடைத்ததில் இருந்து அவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, மனைவி மட்டுமல்லாது, அப்பகுதி மக்களும் மிகுந்த அனைவரும் ஆச்சரியமடைந்து இருந்தனர். இந்நிலையில் தான், அவர் , மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபர், தற்போது நாலந்தா மாவட்டத்தில் உள்ள கிரியக் சதர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரத்தில், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அந்தப் பெண்ணும், இரண்டு குழந்தைகளும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். "என் கணவருக்கு அரசு வேலை கிடைத்ததும், நானும், இரண்டு குழந்தைகளும் வீட்டை விட்டு துரத்தப்பட்டு உள்ளோம். நான்கு நாட்களாக என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தொந்தரவு செய்கின்றனர். முழு விஷயம் போலீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக" பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.