மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஏழ்மை குறித்து பன்முகத்தன்மை ஆய்வு(MPI - Multidimensional Poverty Index) மேற்கொண்டு அது தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் மிக ஏழ்மை மிக்க மாநிலமாக பிகார் திகழ்கிறது. அம்மாநிலத்தில் 51.91 விழுக்காடு மக்கள் ஏழ்மையில் உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, மிக மோசமான ஏழ்மை கொண்டு மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. அங்கு 42.16 விழுக்காடு மக்கள் ஏழ்மையில் உள்ளனர். பின்தங்கிய மாநிலத்தில் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் நான்காவது இடத்திலும், மேகாலயா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஏழ்மை மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு 0.71 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக கோவா, சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏழ்மை குறைவாக உள்ளதாக நிதி ஆயோக் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதலின் படி சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அளவுகோல்களை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதையும் படிங்க: Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை