பாட்னா: பிகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டம் துர்காலியாவை சேர்ந்த அம்பிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், மஜௌலியாவை சேர்ந்த நிர்மல் பைதா என்வருக்கும் நவம்பர் 16ஆம் தேதி திருமணம் நடந்தது. இவரும் ஊர்வலமாக மணமகள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடையே புதுமண தம்பதிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அப்படி வீட்டிற்கு சென்றவுடன் நிர்மல் பைதா மது அருந்தியுள்ளார். அதன்பின் மீண்டும் அம்பிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அவரிடம் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதைக்கேட்ட பெண் வீட்டார் நிர்மல் பைதாவுடன் அவரது தந்தை மற்றும் மைத்துனர்கள் 2 பேரையும் அதே வீட்டில் அடைத்துவைத்தனர்.
அப்படி 4 பேரும் 2 நாள்களாக அடைத்து வைக்கப்பட்டனர். இதனிடையே நிர்மல் பைதாவின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து 4 பேரையும் இன்று (நவம்பர் 19) மீட்டனர். அப்போது அம்பிகா நிர்மல் பைதாவுடன் வாழ விருப்பமில்லை என்று தெரிவித்து அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: டிஜே பார்ட்டியால் விபரீதம்... ஓடும் காரில் மாடல் அழகி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... சக மாடல் அழகி செய்த சதி அம்பலம்...