ETV Bharat / bharat

"அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம் - பிகார் துணை முதலமைச்சர் வீட்டின் மீது தாக்குதல்!

"அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிகார் துணை முதலமைச்சர், பிகார் மாநில பாஜக தலைவர் ஆகியோரின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

Bihar
Bihar
author img

By

Published : Jun 17, 2022, 2:59 PM IST

பாட்னா: மத்திய அரசின் அக்னிபாத் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் மூன்றாவது நாளாக இன்றும் (ஜூன் 17) போராட்டம் நீடித்து வருகிறது. பாட்னா, நவடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. பெட்டியா (Bettiah) நகரில் உள்ள பிகார் துணை முதலமைச்சர் ரேணு தேவி, பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய துணை முதலமைச்சர் ரேணு தேவியின் மகன், போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் தங்களது வீடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தனது தாயார் பாட்னாவில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். பீகாரில் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடிப்பதால், பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.