பாட்னா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை (டிச.23) அழைப்பு விடுத்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஈடிவி பாரத்துக்கு இன்று அளித்த பிரத்யேக பேட்டியில், “ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) திரிணாமுல் காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உடன் இணக்கமான உறவை கொண்டுள்ளது.
மகா கூட்டணி
மேற்கு வங்கத்தில் மூன்று கட்சிகளும் இணைவது அவசியம். பிகார் சட்டப்பேரவை தேர்தலை மகா கூட்டணி அமைத்து சந்தித்தோம்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய வேண்டும். பிகாரில் மக்களின் ஆதரவு மகா கூட்டணிக்கு கிடைத்தது. இருப்பினும் சிலர் மோசடி வழிகளை பின்பற்றி அரசாங்கத்தை அமைத்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறோம். விவசாய பொருள்கள் சந்தை குழுவை 2006இல் நிதிஷ் குமார் அழித்தார். தற்போது விவசாயிகள் பெரும் அழிவை சந்தித்துவருகின்றனர்.
நாட்டிலேயே குறைவாக வருமானம் பெறுபவர்களாக பிகார் விவசாயிகள் உள்ளனர். இதெற்கெல்லாம் யார் காரணம்? மாநிலத்தில் உணவு உற்பத்தி பெரும் அழிவில் உள்ளது. ஒட்டுமொத்த பிகாரையும் நிதிஷ் குமார் அழித்துவிட்டார்.
சௌத்ரி சரண் சிங் -குக்கு மரியாதை
அன்று விவசாயிகளை அழித்தவர் இன்று தொழிலாளர்கள் பக்கம் திரும்பியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக, விவசாயிகள் வருமானம் பெருகவே இல்லை” என்றார்.
முன்னதாக தேசிய உழவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
जब तक किसानों की आर्थिक स्थिति ठीक नहीं होगी तब तक देश की प्रगति संभव नहीं है। देश की समृद्धि का रास्ता खेत-खलिहानों से होकर गुजरता है।किसानों की दशा सुधरेगी तो देश सुधरेगा।
— Tejashwi Yadav (@yadavtejashwi) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
किसानों के मसीहा पूर्व प्रधानमंत्री चौधरी चरण सिंह जी की जयंती पर उन्हें श्रद्धा सुमन अर्पित कर याद किया। pic.twitter.com/W4IgtIjU3u
">जब तक किसानों की आर्थिक स्थिति ठीक नहीं होगी तब तक देश की प्रगति संभव नहीं है। देश की समृद्धि का रास्ता खेत-खलिहानों से होकर गुजरता है।किसानों की दशा सुधरेगी तो देश सुधरेगा।
— Tejashwi Yadav (@yadavtejashwi) December 23, 2020
किसानों के मसीहा पूर्व प्रधानमंत्री चौधरी चरण सिंह जी की जयंती पर उन्हें श्रद्धा सुमन अर्पित कर याद किया। pic.twitter.com/W4IgtIjU3uजब तक किसानों की आर्थिक स्थिति ठीक नहीं होगी तब तक देश की प्रगति संभव नहीं है। देश की समृद्धि का रास्ता खेत-खलिहानों से होकर गुजरता है।किसानों की दशा सुधरेगी तो देश सुधरेगा।
— Tejashwi Yadav (@yadavtejashwi) December 23, 2020
किसानों के मसीहा पूर्व प्रधानमंत्री चौधरी चरण सिंह जी की जयंती पर उन्हें श्रद्धा सुमन अर्पित कर याद किया। pic.twitter.com/W4IgtIjU3u
மேற்கு வங்கத்தில் ஆர்ஜேடி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, “கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியபின்பு, தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவிப்பார்” என்றார்.
அழைப்பு
ஆர்ஜேடி தேசிய பொதுச்செயலாளர் குலாம் ரசூல் பாலியாவி கூறுகையில், “மேற்கு வங்கத்தில் ஆர்ஜேடி போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறைந்தது 75 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மகா கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த நான்கு அமைச்சர்கள்!