இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தொற்று பாதிப்பால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். பல இடங்களில் சடலங்களை, ஒரே இடத்தில் எரிப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் இறுதிச்சடங்கிற்காக மருத்துவமனையிலிருந்து மயானத்திற்குச் செல்ல அவசர ஊர்தி சேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடும்பத்தினர், இறுதிச்சடங்கை நடத்திட, 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அலோக் சர்மா, ஏழு அவசர ஊர்தி வாகனங்களை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
ஓட்டுநரை பிபிஇ உடை அணிய அறிவுறுத்தி, வாகனத்திற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, அந்தப் புகைப்படத்தைக் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் நரேந்திரா சலூஜா, "கோவிட்-19 நெருக்கடியின்போதும் பாஜக தலைவர்கள் விளம்பரத்தை விடுவதாக இல்லை. இந்தூரில், ஆக்ஸிஜன் டேங்கர் முன்பு படங்களை எடுத்துக்கொண்டு, அதன் விநியோகத்தைத் தாமதப்படுத்தினர். தற்போது, போபாலில், அதே தவறை பாஜகவினர் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவிற்குத் தனது பயணத்தைத் தொடங்கியது 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'