உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது.
தேர்தலுக்கான பணிகளில் ஆளும் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. கூட்டணி, வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்த முன்னணி கட்சிகளில் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வளர்ந்துவரும் இளம் தலைவரான பீம் ஆர்மி கட்சியின் சந்திரசேகர் ஆசாத் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மொத்தம் 33 தொகுதிகளில் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள அவர் அதற்கான வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளார்.
முன்னதாக அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டணிவைத்து சந்திரசேகர் ஆசாத் களமிறங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டாத காரணத்தால் சந்திரசேகர் ஆசாத் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆசாத் கூறுகையில், நாங்கள் மாற்றத்திற்காக நேர்மையுடன் களத்தில் போட்டியிடுகிறோம். பாஜகவை தடுத்து நிறுத்த முழு பலத்தையும் பிரயோகம் செய்வோம். அகிலேஷ் யாதவ் தனது சொல்லுக்கு புறம்பாக செயல்பட்டு ஏமாற்றுகிறார். இப்போது சமாஜ்வாதி 100 இடங்கள் தருகிறோம் என்றால் கூட நாங்கள் அவர்களுடன் செல்லமாட்டோம்.
அனைத்து விவகாரங்கள் குறித்தும் களத்தில் நின்று போராட்டம் நடத்தியது பீம் ஆர்மி. எனது சுயமரியாதையை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. தலித்துகள் இன்றி சமாஜ்வாதி கட்சி முழுமை அற்றதாகவே காணப்படும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 19 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?