ETV Bharat / bharat

P Chidambaram: பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் மறைவுக்கு பா.சிதம்பரம் இரங்கல்!

மறைந்த மூத்த பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பா.சிதம்பரம்
பா.சிதம்பரம்
author img

By

Published : Jan 19, 2023, 5:46 PM IST

சென்னை: மூத்த பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் காலமானார். 79 வயதான அவர், பரத நாட்டிய உலகில் தனித்துவம் மிக்க கலைஞராக வலம் வந்தவர். பரத நாட்டியம் மட்டுமின்றி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக இயக்குநர், பரத நாட்டிய ஆசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர்.

பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் கலை சேவைக்காக அவருக்கு கலைமாமணி விருது மற்றும் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பா.சிதம்பரம் இரங்கல்
பா.சிதம்பரம் இரங்கல்

பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதனின் மறைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். அரவது இரங்கல் பதிவில், பிரபல நடனக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் காலமானது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், இசை மற்றும் நுண்கலைகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த கலைஞர் என்றும் தெரிவித்துள்ளார். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர், மற்றும் நடனக் கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜீ5 ஓடிடி தளத்தின் புதிய தொடர் 'அயலி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.