ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் மதுபானக் கடையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் அதிலிருந்த மதுபாட்டில்களை திருடிச்சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து கடையின் உரிமையாளர், கடைக்குச் சென்று பார்த்தபோது அதில் 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் ஓதியம் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மதுபாட்டில்கள் திருடியது தெரியவந்தது. பின்னர், அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மளிகை, எலெக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு