தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா. தனது உறவினரான பிரசாந்தைச் சந்திக்க ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தூலாப்பள்ளி ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்க இருவரும் நீரில் குளித்து கொண்டே டிக்டாக்கில் வீடியோக்களை எடுத்துள்ளனர். வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் இருந்த நரசிம்மா எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். அவருக்கு உதவி செய்ய முயற்சித்தும் முடியாததால், பிரசாந்த் உடனடியாக அப்பகுதி மக்களை நாடி உதவிக்காக அழைத்து வந்தார். ஆனால் அதற்குள் நரசிம்மா நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.