ETV Bharat / bharat

'சீனாவை பழிக்கு பழி வாங்க வேண்டும்'- சகோதரனை பறிகொடுத்த இளம்பெண் கண்ணீர்! - இந்திய வீரர் ராஜேஷ் ஓரான்

பாட்னா: இந்திய ராணுவத்தின் மீதான சீனாவின் தாக்குதலில் தனது சகோதரனை இழந்துள்ள இளம்பெண், சீனா மீது பழிக்கு பழி நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவோம் என கண்ணீர் மல்க கூறினார்.

A young soldier from Birbhum martyred yesterday in Galwan Valley family wants India to take revenge young soldier died Galwan Valley Rajesh Orang Birbhum’s Mohammedbazar சீன ராணுவம் தாக்குதல் கிழக்கு லடாக் வன்முறை இந்திய வீரர் ராஜேஷ் ஓரான் பிகார்

author img

By

Published : Jun 17, 2020, 11:13 AM IST

Updated : Jun 18, 2020, 7:58 AM IST

பிகார் மாநிலம் பிர்பூம் பூடுரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயி சுபாஷ் ஓராங். இவரின் ஒரே மகன் ராஜேஷ் ஓரான் (வயது 25). இவர் இந்திய ராணுவத்தில் 2015ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். அங்கு எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் மீண்டும் படையில் இணைந்தார். இவர் நேற்று நடந்த இந்திய ராணுவத்தின் மீதான சீன தாக்குதலில் நாட்டுக்காக தனது இன்னுயிரை கொடுத்துள்ளார்.

இவரின் இறப்பையடுத்து பூடுரா கிராமம் முழுவதும் சோகம் பூண்டுள்ளது. இந்நிலையில் தோய்ந்த முகத்துடன் கண்ணீர் மல்க காணப்பட்ட ராஜேஷின் சகோதரி, “சீனாவை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் வலியுறுத்துவோம்” என்றார்.

இந்திய எல்லையான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் தங்களது ராணுவ வீரர்களைக் குவித்துள்ளனர்.

'சீனாவை பழிக்கு பழி வாங்க வேண்டும்'- சகோதரனை பறிகொடுத்த இளம்பெண் கண்ணீர்!

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில், சீனா தனது பாதுகாப்புப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியது. இந்நிலையில் நேற்று (ஜூன் 16) இந்திய ராணுவத்தின் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாட்டு வீரர்களும் கைகளில் ஆயுதங்கள் இன்றி மோதிக்கொண்டுள்ளனர்.

இந்த வன்முறை தாக்குதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, சீன தேசியக்கொடி எரிப்பு!

Last Updated : Jun 18, 2020, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.