ETV Bharat / bharat

பெண்களுக்கெதிரான குற்ற வழக்கில் போலீசார் திறமையுடன் செயல்பட உத்தரவு! - உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி

லக்னோ: பெண்கள், சிறுமிகள் மற்றும் பட்டியலின பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பான குற்ற வழக்குகளில் மாநில காவல் துறை திறமையாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

yogi
yogi
author img

By

Published : Oct 5, 2020, 11:20 AM IST

பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடந்த 14ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் கடந்த செப்.29ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து காவல் துறையினர் அந்தப் பெண்ணின் உடலை ஹாத்ராஸில் பெற்றோருக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல இடங்களில் போராட்டங்களாக வெடித்துள்ளது.

இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், சிறுமிகள் மற்றும் பட்டியலின பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்குகளில் மாநில காவல்துறை திறமையாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். ஒரு மணிநேரத்திற்கும் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவதாக சமீபத்திய என்ஆர்சிபி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) தரவை மேற்கோள் காட்டி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 55.2 விழுக்காடு தண்டனை விகிதத்தை அரசு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் எட்டாயிரத்து 59 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஆயிரத்து 625 வழக்கு என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை தொடங்கி வைக்கும் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.