கரோனா பாதிப்பிலிருந்து மீளுவதற்கும் அதனைத் தடுப்பதற்கும் மத்திய அரசு அவசர கால நிதியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் நிதிப்பங்களிப்பை ஆற்றியுள்ளன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் பணிபுரியும் 27.5 லட்சம் பணியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு 611 கோடி ரூபாயை நேரடியாக அனுப்பியுள்ளார்.
இந்த நிதியை அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் செலுத்தியுள்ளார்.
மேலும், யோகி ஆதித்யநாத் காணொலி கலந்தாய்வு மூலம் அத்தொழிலாளர்களுடன் உரை நிகழ்த்தினார். அப்போது, அத்திட்டம் பற்றியும் அதன்மூலம் பணம் செலுத்தியது பற்றியும் அவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
மேலும், கரோனா முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வுடன் செயல்படுவது தொடர்பாகவும் அவர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'சோஷியல் டிஸ்டன்ஸ்' காலத்தின் அவசியம்: சுதா சேஷையனின் நுட்பமான விளக்கம்