உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இருவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால், பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருவரது பேச்சுகளும் அமைந்ததால் யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணி முதல் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.