ETV Bharat / bharat

குஜராத்தில் அமையவுள்ள உலகின் மிகப் பெரிய வன விலங்கு பூங்கா - குஜராத் ஜம்நகர் வனவிலங்கு பூங்கா

உலகின் மிகப்பெரிய வன விலங்கு பூங்கா குஜராத் மாநிலம் ஜம்நகரில் விரைவில் அமையவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் அமையவுள்ள உலகின் மிகப் பெரிய வன விலங்கு பூங்கா

author img

By

Published : Dec 20, 2020, 3:33 PM IST

காந்திநகர்: ரிலையன் நிறுவனத்தின் மேம்பாட்டில், உலகின் மிகப் பெரிய வன விலங்கு பூங்கா குஜராத் மாநிலம் ஜம்நகரில் விரைவில் அமையவுள்ளதாக, அம்மாநில அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலர் எம்.கே.தாஸ், "உலகின் மிகப்பெரிய சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது போல், விரைவில் உலகின் மிகப்பெரிய வன விலங்கு பூங்காவும் ஜம்நகரில் அமைக்கப்படவுள்ளது. இங்கு பல இனத்தைச் சேர்ந்த விலங்குகள், பறவைகள் இடம்பெறும்" என்றார்.

அசோசம் நிறுவன வார நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், இந்த பூங்கா 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த க்ரீன்ஸ் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு பூங்கா (Greens Zoological Rescue and Rehabilitation Kingdom) அமைப்பது தொடர்பான செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதனை ரியலன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பூங்காவில் இடம்பெறும் உயிரினங்கள்:

அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள வன விலங்குகளான, ஆப்பிரிக்கா சிங்கம், சிறுத்தை, சிறுத்தை புலி, இந்திய நரி, ஆசிய சிங்கம், வங்காள புலிகள், கொரில்லா, ஒட்டகச் சிவிங்கி, ஆப்பிரிக்க யானைகள், உடும்பு, தேன் கரடி, ஒராங்குட்டான் குரங்குகள், லெமூர், நீர் யானை, மீன்பிடிப் பூனை, தும்பி பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் பூங்காவில் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விலங்குகளுக்கான தனித் தனி இடங்களாக தவக்களை ஹவுஸ், டிராகன் லாண்ட், நீர் விலங்குகள், இந்தியப் பாலைவனம் போன்றவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 800 ஆண்டுகளுக்கு பின் நிகழும் 'வியாழன், சனி' கோள்களின் பேரிணைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.