ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியிலும் ஆளுநர் மாளிகை சார்பில் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மரக்கன்று நட்டார். அவருடன் ஆளுநர் மாளிகை ஊழியர்களும் இந்நிகழ்வில் தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் முகக்கவசம் அணிந்தும் பங்கேற்றனர். இது குறித்த புகைப்படத்தை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.