ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இந்த தினத்தை உருவாக்கியுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டுள்ள நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடிவருகின்றன.
இந்தாண்டு சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கருத்தாக 'உயிர்பன்மை' தேர்வுசெய்யப்பட்டு, ஜெர்மனியும் அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியாவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.
கடந்தாண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு சுற்றுச்சூழல் தினம் மாறுபட்ட தளத்தில் கொண்டாடப்படவுள்ளது. பிரேசில் காட்டுத் தீ, ஆஸ்திரேலியா முதல் ஆப்ரிக்கா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளி பிரச்னை, ஒட்டுமொத்த உலகத்தையே முடக்கிப்போட்டுள்ள கரோனா பெருந்தொற்று என்ற பேரிடர்களின் வரைகளின் பின்னணியில் இந்தாண்டு சுற்றுச்சூழல் தினம் கொண்டாப்படுகிறது.
நமது உணவு, உயிர்காற்று, குடிநீர் என இயற்கையின் கொடை அனைத்தையும் மனிதர்கள் வரையறையின்றி கபளீகரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக மனித இனம் மேற்கொண்ட அட்டகாசங்களை அமைதியாக பொறுத்தவந்த பூமி, தற்போது எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கியுள்ளது என்பதை நாம் கோவிட் - 19 பாதிப்பிலிருந்தே உணரலாம்.
இந்த கரோனா பாதிப்பால் லாக்டவுன் அறிவிக்கப்ட்டு, மனிதர்களின் இயக்கம் சில மாதங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனின் தீவிர இயக்கத்திலிருந்து விடுபட்ட பூமித்தாய், சற்று இளைப்பாறத் தொடங்கியுள்ளால். அவள் மீண்டு வர மேலும் சில காலம் அவகாசம் தேவைப்படும்.
இயற்கை நம்மிடம் மறைமுகமான விதத்தில் தொடர்பு கொண்டுதான் செய்திகளை அளிக்கும். எனவே, இயற்கை மீதான பாரத்தை குறைக்கும் செயலில் நாம் ஈடுபட்டு, உலகில் வாழும் சக உயிர்கள் மீது கவனம் செலுத்துவோம். மனித குலமும் மேன்மை அடையும்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் லிச்சி பழ விவசாயிகள் கடும் பாதிப்பு