தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரினி(24). இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஐடி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்குள் இவரது ஒப்பந்தம் முடியவுள்ளதாக நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால் வேலை போய்விடும் என்பதால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதனால் கடந்த புதன்கிழமை தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த விரைந்து வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஹரினியின் அறையிலிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடித்தத்தில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு எழுதி இருந்தது என கூறினர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு