தெலங்கானாவில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மீசேவா மையத்தில் நிவாரண நிதிக்காக விண்ணப்பிக்க வரிசையில் நின்றபோது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கிவிழுந்தார்.
மூதாட்டிக்கு சிகிச்சையளிப்பதற்காக விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், வழியிலேயே மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, மூதாட்டிக்கு இதய நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ள நிவாரண நிதியுதவியாக மீசேவா மையங்களில் 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்ததையொட்டி, கடந்த இரண்டு நாள்களாக மீசேவா மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.
காவல் துறையினர் மீசேவா மையங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மக்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் மீது அக்கறை இல்லை. இந்த வெள்ள நிவாரண நிதி ஒரு சிலருக்கு மட்டுமே அளிக்கப்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனிடையே வெள்ள நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க வரிசையில் காத்திருந்த மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.399.93 கோடி வரவு!