கேரள மாநிலம் எதுகலம் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மலப்புரத்திலிருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். கோயில் திருவிழாவுக்காக மலப்புரம் வந்த அப்பெண் வெள்ளிக்கிழமை இரவு, உறவினர் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று நிலைதடுமாறிய அப்பெண் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். கிராமம் முழுவதும் திருவிழா கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்ததால், யாரும் அப்பெண் கிணற்றில் விழுந்ததைக் கவனிக்கவில்லை.
கிணற்றில் விழுந்தாலும், நல்வாய்ப்பாக அப்பெண் செல்போனை கையிலிருந்து நழுவவிடவில்லை. இதனால், செல்போனை பயன்படுத்தி அப்பெண் உறவினர்களுக்கு தான் கிணற்றில் விழுந்துவிட்டத்தை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், உடனயாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீவிர போராட்டத்திற்குப் பின், அப்பெண் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: ரயிலில் சிக்கிய வாலிபரை நூலிழையில் காப்பாற்றிய ஆர்பிஎஃப்!