மேற்குவங்க மாநிலம் பாராசாட் மாவட்டத்திலுள்ள வடக்கு 24 பர்கானா பகுதியைச் சேர்ந்தவர் பருள் சர்கார். ஐம்பது வயதான இப்பெண் இன்று காலை வழக்கம்போல் தனது நெல் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், அவரது நெல் வயலிற்கு அருகிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பெண்ணின் சடலத்தை உடற்கூறாய்விற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை