மச்சாவரம்: குண்டூர் மாவட்டம் மச்சாவரத்தை சேர்த்த பெண் விவசாயி ஒருவர் தனது மனு மீது முறையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மண்டல வருவாய் அலுவலகத்தை பூட்டிய சம்பவம் நடந்துள்ளது.
துணை வட்டாட்சியர், வருவாய் அலுவலர்கள் அனைவரையும் வருவாய் அலுவலகத்தினுள் வைத்து லக்ஷ்மி எனும் விவசாயி பூட்டியுள்ளார். நில விவகாரம் தொடர்பாக லக்ஷ்மி மனு அளித்துள்ளார். ஆனால், அலுவலகர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். இது தொடர்பாக அலுவலகத்துக்கு அலைந்து அலைந்து கோபமான லக்ஷ்மி, அலுவலகத்தை பூட்டிட்டு பூட்டியுள்ளார்.
தனது நிலத்தை பதிவு செய்துள்ளபடி அளக்க வேண்டும் என்பதே லக்ஷ்மியின் கோரிக்கை. சரியான நீதி கிடைக்கும் வரை பூட்டிய அலுவலகத்தை திறக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.