டெல்லியைச் சேர்ந்தவர் பிரவீனா. இவர் தனது கணவருடன் சேர்ந்து தனது மாமனார், மாமியாரை கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில், நேற்று பிரவீனா துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 176-இன்கீழ் விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் திகார் சிறையில் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிறைக் காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முயன்ற கஞ்சா வியாபாரி கைது