ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாயக் குமாரி (63). கைகளில் 12 விரல்களுடனும் கால்களில் 20 கால் விரல்களுடன் பிறந்த இவரை, சூனியக்காரி என்று அவருடைய உறவினர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் இவர் மிகவும் வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.
இது குறித்து பேசிய குமாரி, தான் பிறக்கும் போதே இந்த குறைபாடுடன் பிறந்ததாகவும் தனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் சிகிச்சை செய்ய முடியவில்லை என்றும் தான் சக மனிதர்களை போல இயல்பான வாழ்க்கை வாழவில்லை என்றும் வேதனையுடன் கூறுகிறார்.
தள்ளாடிய நிலையில் தொடர்ந்து பேசிய அவர், தன்னை சூனியக்காரி என்று உறவினர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள் எனவும் இந்த நிலை காரணமாக தானே சிலரிடம் 'என்னை விட்டு விலகி இருங்கள்' என்று கூறியிருப்பதாகவும் சிலர் தன்னை வந்து பார்ப்பதற்கே பயப்படுவர் என்றும் இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி வாழ்ந்ததாகவும் சொல்கிறார்.
இதையும் படிங்க: