ETV Bharat / bharat

'8 லட்சம் பேரை காப்பாற்றிய பூட்டுதல்'- சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாட்டில் 21 நாள்கள் பூட்டுதல் அமல்படுத்தப்பட்டதால் எட்டு லட்சம் பேர் கோவிட்-19 வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

COVID-19  lockdown  Health Ministry  Lav Aggrawal  ICMR  8 லட்சம் பேரை காப்பாற்றிய பூட்டுதல்  சுகாதார அமைச்சகம்  இந்தியாவில் கரோனா பாதிப்பு

author img

By

Published : Apr 12, 2020, 3:04 PM IST

புதிய கரோனா (கோவிட்-19) வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் கூறியதாவது:-

நாட்டில் புதிய கரோனா (கோவிட்-19) வைரஸ் பெருந்தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து வைரஸ் நோய்த்தொற்று பரவும் இடங்கள் உடனடியாக கண்டறியப்பட்டது. மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

தனி நபர் தூய்மை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன. மேலும் கரோனா பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி சோதனை ஓட்டமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

அடுத்து வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில், 21 நாள்கள் பூட்டுதல் (லாக் டவுன்) அமல்படுத்தப்பட்டது. இந்தத் தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் எட்டு லட்சத்து 20 ஆயிரம் பேரை வைரஸ் தாக்கியிருக்கும்.

ஒருவேளை பூட்டுதல் அறிவிக்காமல், தடுப்பு நடவடிக்கை மட்டும் எடுத்திருந்தால், ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் 43 ஆயிரத்து 370 பேரும், 15ஆம் தேதிக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

எனவே கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நாட்டில் 586 மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகளுடன் தனிமை வாா்டுகளும், 11 ஆயிரத்து 500 தீவிர சிகிச்சை வாா்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.