இந்திய ரயில்வே அமைச்சகம் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கட்டணத் தொகையை வசூலிக்கும். டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்தால் அவர்களிடமிருந்து ரூ.250 வசூல் செய்யப்படும். இதையடுத்து பயணிகள் கட்டணத்தை செலுத்த மறுத்தாலோ, பணம் இல்லை என்று காரணம் கூறினாலோ ரயில்வே சட்டம் 137ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ரூ.1000 அபாரதம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில், 2016-2019ஆம் ஆண்டு மட்டும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1,377 கோடி ரயில்வே அமைச்சகம் வசூலித்துள்ளது. இதில் அதிகமாக 2018-2019ஆம் ஆண்டில்தான் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அதிகம் பேர் பயணம் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு இது தொடர்பாக கடினமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றன என்று ரயில்வே அலுவலர்கள் கூறியுள்ளனர்.