இந்திய எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சீனா தனது ராணுவத்தினரின் மூலம் சீண்டல் மேற்கொள்ளும் நிலையில், அதற்கு பதில் தரும் விதமாக இந்தியாவும் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் எல்.ஏ.சியில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறலை மேற்கொள்ளும். முக்கிய எல்லைப் பகுதிகளான அருணாச்சல், சிக்கிம், லடாக் ஆகிய இடங்களில் சீன ராணுவத்தின் சீண்டல் நடைபெறும் நிலையில் கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை குவித்து தேவையற்ற சலசலப்பை சீனா ஏற்படுத்திவருகிறது.
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா தற்போது குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவும் இதற்கு பதில் அளிக்கும் விதமாக எல்லைப் பகுதியில் ராணுவத்தினரை குவித்துவருகிறது. அத்துடன், ராணுவ வாகனங்கள் மூலம் பேரணியோ ரோந்தோ சீனா நடத்துகிறதா எனவும் கூர்மையாக கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா ஆளுநரைச் சந்தித்த சரத் பவார்