மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த 24 மணி நேரத்தில் 9,440 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 55.77 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதுவரை இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 195 பேர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் கரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்தால் அவர்களின் 30.04 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 114.67 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரிக்காவில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா... 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு