மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாநில வடக்கு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அனழப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "உயிரே போனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதேபோல் புதுச்சேரியிலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” என்றார்.
இந்த போராட்டத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் காந்தி, சரவணன், பலராமன், ஏ.கே. குமார், செந்தில் குமார், லோகயன், பரிதி உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது மோடி அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற ஏஜிபி கட்சி: பாஜக- ஏஜிபி நட்பு முறிவு?